திருவள்ளுவர் சிலை திறப்பு - ஆக. 1ம் தேதியே கருணாநிதி பெங்களூர் பயணம்

பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக் கரையோரம் உள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் சாக்குப் பையில் சிறை வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவருக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
பெங்களூரில் வள்ளுவர் சிலையை நிறுவியதைப் போல, சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலையை நிறுவ தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வள்ளுவர் சிலைப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலை திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எதியூரப்பா அறிவித்தார். இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சிலைத் திறப்புக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
சிலைத் திறப்பு விழா 9ம் தேதிதான் என்றாலும் கூட முதல்வர் கருணாநிதி 1ம் தேதியே பெங்களூர் கிளம்பிச் செல்கிறார். சிலை திறப்பு விழாவை முடித்து விட்டு அவர் சென்னை திரும்புவார்.
தனது பெங்களூர் பயணத்தின்போது காவிரிப் பிரச்சினை, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினைகள் குறித்து கர்நாடக முதல்வருடன் கருணாநிதி பேசுவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications