இடைத் தேர்தல் - விஜயகாந்த் 12 நாள் புயல் பிரசாரம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலுக்காக 12 நாள் பிரசாரத்தைத் திட்டமிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுவரை கிடைத்திராத அரிய வாய்ப்பு தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. திமுகவுடன் நேரடியாக மோதும் சந்தர்ப்பம்தான் அது. மேலும் அதிமுகவும் களத்தில் இல்லை. இதனால் பெருவாரியான வாக்குகளை ஈர்க்கும் பெரும் சந்தர்ப்பம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. சற்று முயன்றால் வெற்றிக் கனியை பறிக்கும் வாய்ப்பும் கூடவே உள்ளது.
இதனால் இடைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் விரிவான பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் விஜயகாந்த். இதற்காக 12 நாட்கள் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...
இளையாங்குடியில் தொடக்கம்...
இளையாங்குடியில் ஆகஸ்ட்5 மற்றும் 6 ஆகிய இரு நாட்கள் கட்சியின் வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் எம்.சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக 7,8 தேதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார்.
கம்பம் தொகுதியில் 9, 10ம் தேதிகளில் தேமுதிக வேட்பாளர் ஆர்.அருண்குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பர்கூர், தொண்டாமுத்தூரில் 6 நாள் பிரசாரம்...
பர்கூர் தொகுதி வேட்பாளர் வி.சந்திரனை ஆதரித்து 11, 12,13 ஆகிய 3 நாட்கள் வாக்கு சேகரிக்கிறார்.
கடைசியாக தொண்டாமுத்தூர் தொகுதியில் கே.தங்கவேலுவை ஆதரித்து 14,15,16 ஆகிய 3 நாட்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பர்கூரில் திமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications