ராணுவ அதிகாரிகளுக்கு ராஜபக்சே தந்த பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றிய 3 ராணுவ அதிகாரிகளுக்கு அதிபர் ராஜபக்சே பதவி உயர்வு அளித்து கவுரப்படுத்தியுள்ளார்.

பிரிகேடியர்கள் சவேந்திர சில்வா, பிரசன்ன டிசில்வா, சார்ஜி கல்லகே ஆகியோர் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் பீல்டு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர்தான் பிரபாகரன் கடைசியாக பதுங்கியிருந்த பகுதியை மீட்டவர்கள். இந்த படையினர்தான் பிரபாகரனை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் சவேந்திர சில்வா பேட்டி அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.

புலிகளுக்கு எதிரான போர் முடிந்தது முதல் ராணுவ அதிகாரிகளை குளிப்பாட்டி குஷிப்படுத்தும் வேலையில்தான் இலங்கை அரசு படு மும்முரமாக உள்ளது. ராணுவ தளபதியாக இருந்த பொன்சேகாவை கூட்டுப் படைத் தலைவராக உயர்த்தினார் ராஜபக்சே என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+