திமுக பாவமன்னிப்பு கேட்டால் மீண்டும் கூட்டணி-தா.பா
ஸ்ரீவைகுண்டம்: அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை இந்திய கம்யூ கட்சி முழு பலத்துடன் எதிர்க்கும் என்று தா. பாண்டியன் கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனலெட்சுமியோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்த இ.கம்யூ கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இந்திய கம்யூ கட்சி தனது பிரசாரத்தை தொடங்கி விட்டது. எங்கள் கட்சி தொடக்கம் முதலே பிரச்சாரம் தொடங்கி விட்டது. உழைக்கும் மக்களுக்காக இ.கம்யூ கட்சி தொடர்ந்து போராடும். இன்றைய பிரச்சனைகளை மக்களிடம் கூறி எங்களுக்கு வாக்கு கேட்போம்.
எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினால் சட்டமன்றத்தில் இப்பகுதி மக்கள் பிரச்சனை குறித்து குரல் எழுப்புவோம். திமுக, காங் கட்சிக்கு எதிராக அளிக்ககப்படும் வாக்குகளையும், அதிமுக வாக்குகளையும் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
பண பலம், அத்துமீறல், அதிகார பலம் போன்றவைகளை இத்தொகுதியில் முழுபலத்துடன் எதிர்ப்போம் என்றார்.
பின்னர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, பாவமன்னிப்பு கேட்டால், அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாங்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டோம்.
அதிமுக போட்டியிடாததால் திமுக-காங்கிரஸ் கட்சிகளை வெறுக்கும் மக்களின் ஓட்டுக்கள் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக கூட்டணிக்கு நாங்கள் மீண்டும் செல்வோம் என்பது கற்பனை. திமுக இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அதற்காக பாவமன்னிப்பு கேட்டால், மீண்டும் அக் கட்சியுடன் சேருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications