இந்திய, சீன கார்களை வாங்க அமெரிக்கர்கள் ஆர்வம்
வாஷிங்டன்: இந்திய மற்றும் சீனத் தயாரிப்பு கார்களை வாங்க தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளதாக ஒரு கருத்தாய்வு கூறுகிறது.
அமெரிக்காவில் இந்திய, சீன தயாரிப்புகளுக்கான வாய்ப்புகள் என்ற பெயரில் ஒரு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அதில், 15 சதவீதம் பேர், அடுத்த முறை கார் வாங்கினால் சீன தயாரிப்பு காரை வாங்க முயற்சிப்பேன் என்று தெரிவித்தனராம்.
11 சதவீதம் பேர் இந்திய தயாரிப்பு கார்களை வாங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆட்டோபசிபிக் நடத்திய இந்த கருத்தாய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆட்டோபசிபிக் தலைவர் ஜார்ஜ் பீட்டர்சன் இதுகுறித்துக் கூறுகையில், ஏற்கனவே கொரிய தயாரிப்பான ஹூன்டாய், கியா ஆகிய கார்கள் அமெரிக்காவில் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சீனா மற்றும் இந்திய கார்கள் மீது அமெரிக்கர்களுக்கு ஆர்வம் பிறந்திருப்பது வியப்பளிக்கிறது. இருப்பினும் கொரிய தயாரிப்புகளுக்கு இந்த இரு நாடுகளின் கார்களும் எந்த அளவுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரியவில்லை.
சீன, இந்திய கார்கள் பக்கம் அமெரிக்கர்களின் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. இதில் வெற்றி பெறப் போவது யார் என்பதை இப்போதே ஊகிக்க முடியாது என்றார்.
இந்திய, சீன கார்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள வாடிக்கையாளர்கள் தற்போது ஜப்பான், கொரிய தயாரிப்பு கார்களை வைத்துள்ளவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சீன, இந்திய கார்கள் அமெரிக்க சாலைகளை அலங்கரிக்க ஆரம்பித்தால், இந்த நிறுவனங்களுக்கு சற்று சிக்கல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications