ராஜினாமா நிராகரிப்பால் பணிக்குத் திரும்பினார் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை நிராகரித்து விட்டதால் அப்துல்லா இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய செக்ஸ் ஊழல் தொடர்பான சர்ச்சையில் உமர் அப்துல்லாவை இழுத்து விட்டு பெரும் புகார் கூறியது மக்கள் ஜனநாயகக் கட்சி.
இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உமர். கட்சியினர் தடுத்தும் கேளாமல் அவர் ஆளுநர் வோராவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இருப்பினும் ஆளுநர் வோரா நேற்று உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார் உமர் அப்துல்லா. இன்று காலை தலைமைச் செயலகம் வந்த அவரை ஊழியர்கள் வரிசையில் நின்று வரவேற்றனர்.
அவர்களுடன் உரையாடிய பின்னர் கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார் உமர். மேலும் தனது அமைச்சரவை சகாக்களுடன் வழக்கமான கூட்டத்தையும் அவர் மேற்கொண்டார். பின்னர் கேபினட் கூட்டமும் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பெயர் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் மட்டுமல்லாமல், இந்த மாநிலத்தின் அரசியல், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயரும் களங்கப்படுத்தப்படுவது போல இருந்ததால்தான் நான் ராஜினாமா முடிவை எடுக்க நேரிட்டது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications