கர்நாடக தீவிரவாத தடுப்பு சட்ட மசோதா தயார் - தீவிரவாதத்திற்கு மரண தண்டனை!

மகாராஷ்டிரா, குஜராத் மாநில அரசுகள் உருவாக்கியுள்ள தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் கர்நாடக அரசும் தனது தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மசோதாவுக்கு கர்நாடக சட்டசபை இன்று ஒப்புதல் அளித்தது.
தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. ஆனால் இந்த சட்டம் தவறான முறையில் பயன்படுத்தபபடும் என காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
சட்ட மசோதா குறித்து உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா கூறுகையில், தீவிரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளோம். மேலும், தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். முந்தைய சட்டத்தில் இந்த அம்சம் இல்லாமல் இருந்தது. தற்போது மரண தண்டனையை புதிதாக சேர்த்துள்ளோம் என்றார்.
இந்த சட்ட மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை உருவாக்கி அதை ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு முறையும் அதை மத்திய அரசின் சிபாரிசை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்
என்பது நினைவிருக்கலாம்.
கர்நாடக அரசின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...
- தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாவோர் ஒரு வருடம் வரை குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே சிறையில் வைக்கப்படலாம்.
- தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.
- தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் செல்போன் உள்ளிட்ட பேச்சுக்களை பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications