பெரம்பலூரில் சட்டவிரோத ஜெயலலிதா வரவேற்பு வளைவு - இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கடந்த 2005ம் ஆண்டு பெரம்பலூரில், அதிமுக பொதுச் செயலாளர் (அப்போது முதல்வராக இருந்தார்) ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டது.
துறையூர் - பெரம்பலூர் சாலை, துரைமங்கலம் சாலை ஆகிய இடங்களில் இந்த வரவேற்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன.
இந்த வளைவுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அலங்கார வளைவுகளை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால் அரசு உத்தரவுடன் அமைக்கப்பட்டதால் இதை இடிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
இதை எதிர்த்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த அலங்கார வளைவுகள் சட்டவிரோதமானது. எனவே இதை அகற்ற வேண்டும். மனுதாரருக்கு ஆர்ச் அமைத்தவர்கள் ரூ. 50, 000 வழக்கு செலவாக தர வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து எந்த நேரத்திலும் ஜெயலலிதாவுக்காக அமைக்கப்பட்ட வளைவுகள் இடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications