சேவை வரியை ரத்து செய்யக் கோரி வக்கீல்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியிலும் வக்கீல்கள் கோர்ட்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
வக்கீல்களுக்கான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை. கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் இன்று கோர்ட்களுக்கு வக்கீல்கள் செல்லாமல் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications