பணியில் அலட்சியம்-2 ஊரக வளர்ச்சி அலுவர்கள் சஸ்பெண்ட்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக வளர்ச்சித்துறையின் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்த போது பணியில்
அலட்சியமாக இருந்த இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக வளர்ச்சித்துறையின் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்தார்.
அப்போது, ஒரத்தநாடு யூனியன் ஆழிவாய்கால் பஞ்சாயத்து தெற்கு நத்தம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட நூலக பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்.
அடுத்து, கீழஉளூர் பஞ்சாயத்து பரிதியப்பர் கோவில் கிராம நூலகத்தை பார்வையிட்டார். பின்பு, திருவோணம் யூனியன் தோப்புவிடுதி சமத்துவபுரம் அமைக்கும் பணி 2.87
கோடியில் நடந்து வருகிறது. இந்தப் பணியை ஆய்வு செய்தார்.
அடுத்து, பொன்னாப்பூர் மேற்கு பஞ்சாயத்து வேளாகுளம் தேசிய வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் 100 பேர் மூலம் நடைபெற்று
வருகிறது.
பணியாளர்களுக்கான வருகை பதிவேடு உரிய நேரத்தில் முடிக்கப்படாமலும், பணப்பட்டுவாடா பதிவேடும் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது.
இதனால், பணியில் அலட்சியமாக இருந்த, அந்த பஞ்சாயத்து உதவியாளர் லெட்சுமணன், மக்கள் நலப்பணியாளர் குணசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கலெக்டர் சண்முகம், திட்ட அலுவலர் மந்திராசலம், உதவி இயக்குனர் தேவதாஸ் பொன்னையா, செயற்பொறியாளர் தாமஸ் ஜோசப் உட்பட பலர் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications