மறு பரிசீலனைக்குப் பின்னர் பர்கூர் தேமுதிக வேட்பாளரின் மனு ஏற்பு

தேமுதிக சார்பில் பர்கூரில் சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையின்போது சந்திரன் மற்றும் தேமுதிகவின் மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் சரிவர பூர்த்தி செய்யப்படவிலலை என்று கூறி மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.
இதையடுத்து நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அப்போது தேமுதிக வேட்பாளர்களின் மனுக்களில் இருந்த சாதாரண பிழைகளை தாக்கல் செய்தபோதே தேர்தல் அதிகாரி சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டு வேண்டும் என்றே பின்னர் நிராகரித்து விட்டதாக குறை கூறியிருந்தார்.
மேலும், இதுபோன்ற சாதாரண பிழைகளை நிவர்த்தி செய்து மனுக்களை பரிசீலனை செய்த சம்பவங்கள் முன்பு நிறைய நடந்ததுண்டு என்றும் சுட்டிக் காட்டி மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து சந்திரனின் வேட்பு மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று சந்திரனின் மனு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மறு பரிசீலனைக்குப் பின்னர் சந்திரனின் மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு தேமுதிகவின் முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாரும் முரசு சின்னத்தைக் கோராவிட்டால் சந்திரனுக்குக் கிடைக்கலாம்.
இல்லாவிட்டால், குலுக்கல் மூலம் என்ன சின்னம் வருகிறதோ, அதில்தான் அவர் போட்டியிட முடியும்.
சுயேச்சையின் மனு ஏற்பு..
இதற்கிடையே, வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி சுயேச்சையின் வேட்பு மனு இன்று மறு பரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டது.
ராஜா என்பவர் சுயேச்சையாகப் போட்டியிட ஸ்ரீவைகுண்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் பரிசீலனையின்போது அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் முறையிட்டார். இதையடுத்து இன்று மறு பரிசீலனை செய்து மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அத்தொகுதியில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications