எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு மனை - எதிர்த்து வழக்கு தொடர அனுமதி
சென்னை: எம்.எல்.ஏக்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு, இலவச வீட்டு மனை ஆகியவற்றை எதிர்த்து வழக்கு தொடர சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் இறுதியில், எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கவும் முதல்வர் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆஜரானார்.
அவர்களிடம், 5 ஆண்டு காலம் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.34 ஆயிரம் அளவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களின் பணி என்பது சமூக சேவைக்கு நிகரானது. எனவே அவர்களுக்கு இது போன்ற ஊதியமோ வீட்டு மனைகளோ வழங்கத் தேவை இல்லை. எனவே நான் இதை எதிர்த்து வழக்கு தொடர்ரவுள்ளேன். அதற்கு அனுமதி வேண்டும் என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி கோகலே கூறுகையில், நீங்கள் மனுத் தாக்கல் செய்யுங்கள், நாங்கள் விசாரிக்கிறோம் என்று அனுமதி அளித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications