குஷ்பு மேட்டூருக்கு வந்தால் பிரச்சினை ஏற்படும் - வக்கீல்
மேட்டூர்: விசாரணைக்காக நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டுக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று மேட்டூர் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல மேட்டூர் நீதிமன்றத்தில் முருகன் என்ற வழக்கறிஞரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக குஷ்பு வந்தபோது அவர் மீது அழுகிய முட்டை, தக்காளிகளை வீசிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக 41 பேர் மீது மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக குஷ்புவை நேரில் அழைப்பதா, வேண்டாமா என்ற பிரச்சினை எழுந்தது.
இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சதாசிவம், மீண்டும் குஷ்புவை கோர்ட்டுக்கு அழைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அவரை நேரில் அழைக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று நீதிபதி நந்தினிதேவி விசாரித்தார். பின்னர் செப்டம்பர் 22ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications