புதுச்சேரி காங். ஆட்சிக்கு கண்ணன் ஆதரவு - திமுக தயவு தேவையில்லை!
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு கண்ணன் தலைமையிலான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால் திமுகவின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலையை காங்கிரஸ் அடைந்துள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன், கடிதம் கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 எம்எல்ஏக்களுடன் உள்ளது. ஆட்சி நடத்த 16 பேரின் ஆதரவு தேவை. தற்போது 7 உறுப்பினர்களைக் கொண்ட திமுக ஆதரவு தருவதால், காங்கிரஸ் ஆட்சி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதால் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆதரித்தது. இப்போது காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தர முன்வ்நதுள்ளது.
இதன் மூலம் தனது கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் போக, கண்ணன் கட்சியின் 3, சுயேச்சைகள் 3 பேரின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலம் இதிலேயே கிடைத்து விட்டது.
இதனால் திமுகவின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆட்சி கவிழாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாமக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாற்றம் காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டன. இதனால் திமுகவின் தயவை பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ். இந்த நிலையில் கண்ணன் கை கொடுத்திருப்பதால் நெருக்கடியிலிருந்து விலகியுள்ளது காங்கிரஸ்.
வரும் தேர்தலில் கண்ணன் கட்சியுடன் காங்கிரஸ் மேலும் நெருங்கும் எனத் தெரிகிறது. மேலும், லோக்சபா தேர்தல் ஆதரவு மற்றும் இப்போதையை ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கண்ணனுக்கு ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications