புலிகள் மீதான தாக்குதல்: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்
காத்மாண்டு: இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.
தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.
அதேபோல உலக அளவில் உள்ள ஆயுதப் போராட்டங்களையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதிபட ஆதரிப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியதன் மூலம் நேபாள அரசு தவறு செய்து விட்டது. அதைத் திருத்திக் கொள்ள நான்கு நாள் அவகாசம் தருகிறோம். அதற்குப் பிறகும அது திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார் பிரசந்தா.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications