என்னை காப்பாற்ற காங் தேவையில்லை-பூட்டா சிங்
டெல்லி: எனக்கு வந்த பிரச்சினையை நானே சமாளித்துக் கொள்வேன். எனக்கு காங்கிரஸ் கட்சியின் உதவியோ, ஆதரவோ தேவை இல்லை என்று கூறியுள்ளார் மகன் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத் தலைவருமான பூட்டா சிங்.
துப்புறவு காண்டிராக்டரிடமிருந்து ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக பூட்டா சிங்கின் மகன் சரப்ஜோத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பூட்டா சிங் சொல்லித்தான் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். இதனால் பூட்டாவையும் விசாரிக்க சிபிஐ முயன்று வருகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பூட்டா சிங் காங்கிரஸ்காரர் அல்ல, அவர் அரசு சார்பு அமைப்பின் தலைவர் என்று கூறி கைகழுவி விட்டது.
இதுகுறித்து பூட்டா சிங் கூறுகையில், நான் தலித்துகளின் காவலனாகத்தான் என்றும் இருக்கிறேன். எனது வாழ்க்கை முழுவதும் தலித்துகளின் உயர்வுக்காகத்தான் பாடுபட்டுள்ளேன்.
எத்தனையோ ஏழை தலித்துகளின் வாழ்வில் நான் ஒளியேற்றி வைத்தவன். அப்படிப்பட்ட என்னை, ராஜினாமா செய்யச் சொன்னால், அதற்குப் பதில் உயிரை விட்டு விடத் தயாராக உள்ளேன்.
எனது பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை இல்லை. அதை சமாளிக்க என்னால் முடியும் என்று கூறியுள்ளார் பூட்டா சிங்.
-
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?











Click it and Unblock the Notifications