சயீத் விடுதலை: லோக்சபாவில் அமளி - ஒத்திவைப்பு
டெல்லி: லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட மத்திய அரசின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், சயீத் வழக்கை காலவரையினறி ஒத்தி வைத்து விட்டது. இதனால் சுதந்திர மனிதராக மாறியுள்ளார் சயீத்.
இது இன்று லோக்சபாவில் எதிரொலித்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் சயீத் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டின
பூஜ்ய நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை முலாயம் சிங் யாதவ் எழுப்பினார். அவர்க கூறுகையில், நாம் பாகிஸ்தானை நம்பினோம். ஆனால் அந்த நாடு நம்மை ஏமாற்றி துரோகம் இழைத்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மணி நேரம் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல இதுதொடர்பாக பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாகிஸ்தானை முடக்க நமக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் இந்தியா அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டது. இப்போது பாகிஸ்தான் தனக்கு வசதியாக நிலையை மாற்றி விட்டது என்றார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா பேசினார். அவர் கூறுகையில், சயீத்துக்கு மும்பை தாக்குதலில் உள்ள தொடர்பு குறித்த முழுமையான ஆதாரங்களை நாம் பாகிஸ்தானிடம் அளித்தோம். ஆனால் ஐஎஸ்ஐயுடன் அவருக்கு உள்ள தொடர்பால் இப்போது வெளியே வந்து விட்டார்.
மும்பை சம்பவத்தில் அவர்தான் முக்கிய குற்றவாளி. ஆனால் பாகிஸ்தான் அந்தக் காரணம், இந்தக் காரணம் என்று கூறி அவரை விடுவித்து விட்டது என்றார். அப்போது பாஜக உறுப்பினர்கள் அவமானம், அவமானம் என்று கூச்சலிட்டனர்.
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் மீரா குமார் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்யவே, அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications