நாகர்கோவிலில் காதலனுடன் சென்ற மாணவி கடத்தி கற்பழிப்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலனுடன் இருந்த விமான பணிப்பெண் பயிற்சி மாணவியை 4 பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. 3 மணி நேரத்தில் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி அருகேயுள்ள தடிக்காரன் கோணத்தை சேர்ந்தவர் ரூபன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் பீச் ரோட்டை சேர்ந்த சசிலா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்தனர். சசிலா தற்போது திருவனந்தபுரத்தில் விமான பணிப்பெண் பயிற்சி பெற்று வருகிறார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சசிலா நேற்று தனது காதலன் ரூபனை சந்தித்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். தனி்மையில் அமர்ந்து பேச அவர்கள் இடம் தேடினர்.
பின்னர் திருப்பதிசாரம்-பீமனேரி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து அவர்கள் பேசினார்கள். இரவு இருட்டிய பிறகும் அந்த ரோட்டிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இதை நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். ரூபனுடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரூபனை தாக்கி விட்டு சசிலாவை அவர்கள் தூக்கி கொண்டு வயல் பகுதிகளுக்குள் ஓடினர்.
ரூபன் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் சசிலாவை தூக்கி கொண்டு கும்மிருட்டான பகுதிக்கு சென்று விட்டது.
இதையடுத்து செல்போன் மூலம் ரூபன் ஆரல்வாய்மொழி ரோந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடத்தல் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சசிலாவை, தங்களது நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்து விட்டு அக்கும்பல் தப்பி விட்டது.
பின்னர் சசிலாவை அந்த நபர் பஸ் ஏற்றி விடுவதற்காக அழைத்து வந்தார். அப்போது தேரேகால்புதூர் பகுதியில், போலீஸ் கண்களில் அவர்கள் சிக்கினர்.
இதையடுத்து சசிலாவை மீட்ட போலீஸார், அவரை அழைத்து வந்த நபரைப் பிடித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். பமீலாவை போலீசார் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
விசாரணையில் சசிலாவை அழைத்து வந்தவர் திருப்பதிசாரத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி அந்தோணி (32) என்பது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், காதல் ஜோடியை மடக்கி காதலியை கடத்தி சென்று கற்பழித்த கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது.
ராமனாதிச்சன்புதூர் மணி, நல்லூர் பெரியசாமி, ஜான், சத்யம் ஆகியோரே கற்பழித்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
தன்னைக் கடத்திய நான்கு பேரில் 3 பேர் கற்பழித்ததாக சசிலா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications