ரூ. 8.53 லட்சம் லஞ்சம்-இ.எஸ்.ஐ. பெண் இயக்குனர் கைது
சென்னை: சென்னையில் லஞ்சம் வாங்கியதாக இ.எஸ்.ஐ. பெண் அதிகாரி எழிலரசி கைது செய்யப்பட்டுள்ளார்.
எழிலரசி, இ.எஸ்.ஐ.யின் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைப் பிரிவின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
57 வயதாகும் இவருக்கு சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 8.53 லட்சம் லஞ்சப் பணத்தைக் (எழிலரசி ரூ. 10 லட்சம் கேட்டிருந்தாராம்) கொடுக்கப் போவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து எழிலரசியைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். அவரது அயனாவரம் வீட்டில் லஞ்சப் பணம் கைமாறியபோது எழிலரசியை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அவர் தவிர பல்வேறு மருந்து நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கீழ்ப்பாக்கம் கல்பேஸ் ஷா, பாடி புருஷோத்தமன் பாபு, உள்ளகரம் சீனிவாசன், அண்ணாநகர் ஆராவமுதன், கொசப்பேட்டை சுரேஷ் பாபு ஆகிய ஐந்து மருந்து நிறுவன ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மருந்துக் கம்பெனிகளுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான ஆர்டரை தருவதற்காக ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் எழிலரசி. பேச்சுவார்த்தை நடந்து ரூ. 8.53 லட்சம் தர முடிவாகியதாம். அதன்படி பணத்தைக் கொடுக்க வந்தபோதுதான் அத்தனை பேரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் உள்ள எழிலரசியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications