எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு-எதி்ர்த்து 'டிராபிக்' மனு

தமிழக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சமீபத்தில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த ஊதிய உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று கோரி சமூகநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எமஎல்ஏக்களுக்கு கடந்த சில ஆண்டுகளிலேயே 3வது முறையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு கௌரவ அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, வழங்கப்படும் படிகள் உட்பட பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு இருக்கின்றன.
மேலும் அவர்களுக்காக வீட்டு மனை வழங்கும் திட்டமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான சம்பள சுமையால் அரசு அவதிப்படுகிறது. இந்நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை விட எம்எல்ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வு தீர்மானத்தை அமல்படுத்தக் கூடாது என்று மாநில நிதித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி கோகலே மற்றும் நீதிபதி முருகேசன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications