சென்னை மேயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியம் மீதும் மாவட்ட கலெக்டர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார் பொது நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
சென்னை நகரில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மாநகராட்சி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியத்தின் மகன் பிறந்தநாளையொட்டி சென்னை நகரில் பல இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல ஆர்வலரான டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார்.
அதி்ல், இந்த டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பாகும். இதை அகற்றக் கோரி மாநகர மேயர், கலெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா, நீதிபதி ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வரும் 21ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை மாவட்ட கலெக்டர் சோபனா, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications