யாழ்ப்பாணத்தில் ஒதுங்கிய 7 தமிழக மீனவர்கள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு- தகனம்
யாழ்ப்பாணம்: தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் யாழ்ப்பாணம் கரையில் ஒதுங்கியது. அவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காட்டினர். இதையடுத்து நேற்று ஏழு உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் இந்த ஏழு உடல்களும் யாழ் கரைப் பகுதியில் கரை ஒதுங்கின. அழுகிய நிலையில் இருந்த இந்த உடல்களை அடையாளம் காட்ட காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை இந்திய கடற்படையினர் அழைத்து வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து யாழ்ப்பாணம், எழுவைத் தீவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இறந்து போன ஏழு பேரின் உடல்களையும் உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இறந்து போனவர்கள் ராதாகிருஷ்ணன், சேதுமாதவன், சரவணன், தேவச்சந்திரன், முனிராஜ், செந்தில்குமார், நாகநாதன் என்பது தெரிய வந்துள்ளது.
இறந்தவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் உடலில் இருந்த மச்சம் உள்ளிட்ட அடையாளங்களை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அப்போது கோர்ட் மாஜிஸ்திரேட் ஒருவர் உடன் இருந்தார்.
இதையடுத்து ஏழு பேரின் உடல்களையும் உறவினர்கள், யாழ்ப்பாணம், கொம்பையன் மயானத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏழு உடல்களும் ஒரே சிதையில் வைத்து தீமூட்டி தகனம் செய்யப்பட்டன.
இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து உதவிகளையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications