தமிழக கடலோர பாதுகாப்புக்கு 'புல்லட் புரூப்' ரோந்து படகு!
தூத்துக்குடி: தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோர பாதுகாப்பு படைக்கு குண்டு துளைக்காத அதி நவீன ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழு ஐஜி ராஜேஷ் தாஸ் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய நவீன ரோந்து படகு தூத்துக்குடி வந்துள்ளது. சுமார் 12 டன் எடை கொண்ட இந்த படகு ரூ.2.15 கோடி செலவில் கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்று மேலும் 23 ரோந்து படகுகள் வரவுள்ளன. இதில் தூத்துக்குடியில் 4 படகுகள் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். குண்டு துளைக்காத புல்லட் புரூப் கண்ணாடி வசதி கொண்ட இந்த படகு 50 கடல் மைல் வேகத்தில் செல்லும்.
மேலும், கடலோர பாதுகாப்பு வீரர்களுக்காக 'ஆபரேசன் பேரிகார்ட்" என்னும் பெயரில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசின் கடலோர பாதுகாப்பு படை, கப்பற்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது நக்சல்கள் தாக்குதல் எதுவும் இல்லை எனிமும், வரும் காலங்களில் அப்படி எதுவும் நிகழ்ந்தால் கூட, அதனை முறியடிக்கும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
தமிழக கடல்பகுதியில் தற்போதுள்ள 60 சோதனை சாவடிகளுடன், மேலும் 40 அமைக்கப்பட வேண்டும். தற்போது 18 சோதனை சாவடிகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த இயலும் வகையில் 4 சக்கரங்களைக் கொண்ட நவீன ரக பைக் விரைவில் வாங்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications