திமுக - தேமுதிக தொண்டர்கள் கடும் மோதல்
கம்பம்: கம்பம் தொகுதிக்குட்பட்ட அம்மாபட்டி என்ற இடத்தில் விஜயகாந்த வருகைக்கு முன்னதாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை கம்பம் தொகுதிக்கு வந்தார்.
உத்தமபாளையம் அடுத்துள்ள அம்மாபட்டியில் இருந்து விஜயகாந்த் பிரசாரத்தை மாலை 5.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அவர் வந்த வேன் பழுதடைந்த காரணத்தினால் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.
விஜயகாந்த் வருவதற்கு முன்னதாக தே.மு.தி.க. கட்சியினர் அம்மாபட்டியில் கொடி, தோரணங்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது சிலர் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த தி.மு.க. தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கம்பு, கட்டைகளுடன் அடித்துக் கொண்டனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மோதல் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு விஜயகாந்த் அந்த பகுதிக்கு வந்தார். பிரசாரத்தைத் தொடங்கிப் பேசினார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications