குறை கேட்க தமிழக அரசுக்கு சைமா கோரிக்கை
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருவதால், பனியன் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என சைமா சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருப்பூர் சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,
பனியன் உற்பத்தியாளர்களுக்கு, மத்திய அரசு, புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை. குறிப்பாக, உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடிக்கு தீர்வு காண அரசு முன்வரவில்லை.
திருப்பூர் பகுதியில் மட்டும் பனியன் உற்பத்தியாளர்கள் 5,000 -க்கும் அதிகமாக உள்ளனர். 3,000 -க்கும் அதிகமான நிறுவனங்கள், தமிழக வர்த்தகத்தை நம்பியே உள்ளன.
ஏற்றுமதி வர்த்தகம் மூலம், 11 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலாவணி மத்திய அரசுக்கு கிடைக்கிறது. உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கிறது.
மேலும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இந்தியாவிலேயே, ஒரே நகரில் இவ்வளவு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள் திருப்பூரில் மட்டுமே உள்ளன.
ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அளிக்கும் சலுகைகளை போல், உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தவும், தேவையான சலுகைகள் அரசு மூலம் கிடைப்பதில்லை.
உள்நாட்டு வர்த்தக பனியன் உற்பத்தியாளர்களின் திறனை அதிகப்படுத்தவும், தொழிலை மேம்படுத்தவும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மாதம் தோறும் நடத்துவது போன்று பனியன் மற்றும் அதைச் சார்ந்த உபதொழில்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது குறை தீர் கூட்டம் நடத்த அரசு முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications