ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது -மதுக் கடையில் வைத்து வளைப்பு
சென்னை: சென்னையில் மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை நெசப்பாக்கம், கண்ணதாசன் தெருவில் வசித்து வரும் சுப்ரமணி தனது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு எம்ஜிஆர் நகர் மின்வாரியத்தில் மனு செய்தார். ஆனால், இவருக்கு பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.
இதையடு்தது அவர் மின்வாரிய கமர்சியல் அதிகாரி ராஜேந்திரன் (46) என்பவரை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே இணைப்பு தர முடியும் என பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து சுப்ரமணி லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டார். அவர்களின் அறிவுரைப்படி சுப்ரமணி ரூ. 2 ஆயிரம் கொண்டு வருவதாக ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார். அப்போது ராஜேந்திரன் மாலை 5 மணிக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி மாலை 5 மணிக்கு சென்ற சுப்ரமணி பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். பின்னர் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பணத்தை கொடுத்த தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடிக்க அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அவர் அலுவலகத்தில் இல்லை. அருகிலிருந்த மதுக்கடைக்கு சென்றுவிட்டார். அங்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்த ராஜேந்திரன் கையிலிருந்த லஞ்ச பணத்தில் மூன்று 500 ரூபாய் நோட்டுக்களை மதுக்கடை கல்லாவுக்குள் வீசியெறிந்தார். நான்காவது நோட்டை எறியும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
மற்ற மூன்று ரூ. 500 தாள்களையும் தேடி பிடித்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications