யுஎஸ் ஏவுகணை தாக்குதல்-பாகிஸ்தானில் 14 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்த அல்-கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை விரட்டியடித்து, அங்கு புதிய ஆட்சியை கொண்டு வந்தது.
அப்பகுதியில் இருந்து வெளியேறிய தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்க ராணுவம் ஆளில்லாத விமானங்கள் மூலம் அப்பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தாலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெக்சுத் பலியானதாக கூறப்பட்டது.
ஆனால், தாலிபான்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க விமானங்கள் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் அசம் தாரிக் என்பவர் கூறுகையில்,
அமெரிக்க ஏவுகணை தெற்கு வசிர்ஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து 6 பொது மக்கள் பலியானார்கள். இதில் தாலிபான்கள் யாரும் பலியாகவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் அப்பாவி மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். பைதுல்லா மெக்சுத் உயிருடன் இருக்கிறார் என்பதை நான் மீண்டும் உறுதி செய்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார் என்றார் தாரிக்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications