டாமிப்ளூ-முக கவசங்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
டெல்லி: டாமிப்ளூ மாத்திரைகள், முகக் கவசங்களை பதுக்கி வைப்போர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் டாமிப்ளூ மாத்திரைகளை பதுக்கும் வேலைகளில் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை அதிக விலைக்கு விற்க இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல முகக் கவசங்களையும் பதுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் வினீத் செளத்ரி கூறுகையில், இந்தியாவில் டாமிப்ளு மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளன. அதே போல முகக் கவசங்களும் போதுமான அளவு உள்ளன. ஆனால், அவற்றைப் பதுக்கி வைத்து விலையை ஏற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது மருந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டாமிப்ளூ மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மருத்துவமனைகளில் தான் விற்க வேண்டும்.
டாமிப்ளூ உற்பத்தி தொடர்பாக மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. ஒரு வாரத்தில் 3 கோடி மாத்திரைகள் தயாராகிவிடும்.
ஸ்வைன் ப்ளூ சோதனைக்கான கருவிகள் தட்டுப்பாட்டை போக்கை அவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications