சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1000 கோடி
டெல்லி: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மும்பையின் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் மத்திய அரசு ரூ. 2,200 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி கூறினார்.
டெல்லியில் நகர்ப்புற நீர்வள விருதுகள் வழங்கும் விழாவில் ஜெய்ப்பால் ரெட்டி பேசுகையில்,
நாட்டின் இரண்டு பெரிய நகரங்களுக்கு மிகப்பெரிய திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மும்பை நகரி்ன் வெள்ள பிரச்சனைகளை தீர்க்க பிரகன் மும்பை வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் ரூ. 1,200 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
மற்றொரு திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படுகிறது. இங்கு ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் முடிவடைந்த பின்னர் மும்பையில் வெள்ளப் பெருக்கு பிரச்சனையும், சென்னையின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க செய்வதை எங்கள் அமைச்சகத்தின் முதல் வேளை. தற்போது நாடு முழுவதும் குடிநீர் வழங்குவது தொடர்பாக 969 சிறு மற்றும் நடுத்தர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 828 திட்டங்கள் சுகாதாரம் தொடர்பானவை. நீர்தேக்கங்களை பாதுகாக்க அரசு ரூ. 116 கோடி ஒதுக்கியுள்ளது என்றார் ஜெய்ப்பால் ரெட்டி.
ரூ. 54 ஆயிரம் கோடி தேவை...
அவரை தொடர்ந்து ஜனாதிபதி பிரதிபா பாடீல் பேசுகையில்,
அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்து ரூ. 54 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இன்னும் நாட்டின் பல நகரங்களில் உள்ள மக்களுக்கு ஒரு நாளின் சராசரி தேவையான 135 லிட்டர் நீர் கிடைப்பதில்லை என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications