விபச்சாரம்: துணை நடிகை சிக்கினார்-10 பெண்கள் மீட்பு, 13 புரோக்கர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட துணை நடிகை உள்பட 10 பெண்கள் மீட்கப்பட்டு 4 பெண் புரோக்கர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.

விபச்சார தடுப்புப் பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் கோடம்பாக்கம், திருவான்மியூர், கோயம்பேடு ஆகிய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோடம்பாக்கம் ராம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் ஒரு கும்பல் விபசாரத்துக்கு ஆட்களை அழைப்பது தெரியந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரதாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரமேஷ் என்ற புரோக்கரை பிடித்தனர்.

இவர் கொடுத்த தகவலின்பேரில் கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வத்சலா, மனோஜ்குமார், உசேன், ரமேஷ், பானுமதி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் மனோஜ் குமாரும், ரமேசும் நடிகைகளின் மேக்கப் மேன்களிடம் உதவியாளர்களாக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

போலீசார் மேலும் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்டருந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் தேவி என்ற பிரியா ( 37) என்ற துணை நடிகையையும் பிடித்தனர். இவர் தனம் படத்தில் நடித்துள்ளார்.

இவருடன் இருந்த லட்சுமி, விஜயலட்சுமி என்ற 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அதேதேபோல கொளத்தூர் ஜெயந்தி நகர் மெயின் ரோட்டில் வீட்டில் வைத்து விபசார தொழிலில் ஈடுபட்ட ஜெகன், ஆன்லின் ஷிபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

திருவானமியூர் காமராஜர் நகரில் பெண்கள வைத்து விபசாரம் நடத்திய பாபு என்பவர் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மற்றும் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

இவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர்களான சித்ரா (50), தேவி (44), பானுமதி (38), வத்சலா (53) ஆகியோரும்,

பாபு (27), ராஜேஷ் (34), இளங்கோவன் (37), ஜெயபால் (56), மனோஜ் குமார் (34), உசேன் (53), ரமேஷ் (21), ஜெகன் (24) ஆன்ஸின் (26) ஆகிய 13 புரோக்கர்களையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தி ஏற்கனவை கைது செய்யப்பட்டுள்ள பாண்டியன் என்ற நாராயணனை (39) கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி போலீஸார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் 23 விச்பசார புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

18 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+