ஸ்வைன் ப்ளூ-பெங்களூரில் மேலும் 2 பெண்கள் பலி
பெங்களூர்: பெங்களூரில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இங்கு இந்தக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர் அஸ்வத் நகரைச் சேர்ந்த சம்சத் பேகம் (27) என்ற பெண் கடும் ஸ்வைன் ப்ளூ அறிகுறிகளுடன் கடந்த 10ம் தேதி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் 3 மாதமாகவே மூச்சுத் திணறலால் தவித்து வந்துள்ளார். சமீபத்தில் காய்ச்சலும் இருமலும் அதிகரிக்கவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்தபோது அவரது இருதய வால்வு பாதிக்கப்பட்டுள்ளதும், நிமோனியா தாக்குதல் இருப்பதும் தெரியவந்தது. ஐசியுவில் வைக்கப்பட்டு டாமிப்ளு மருந்து அளிக்கப்பட்டது. ஆனால், அவரது கிட்னிகளும் பாதிக்கப்பட்டதில் நேற்றிரவு இறந்தார்.
அதேபோல் ஷில்பா ஹெக்டே (27) என்ற பெண் பன்றி காய்ச்சல் நோயுடன், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இதன்மூலம் பெங்களூரி்ல் ஸ்வைன் ப்ளூ பலிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 5 மாத குழந்தைக்கு...
இந் நிலையில் கேரளாவில் வயநாடு பகுதியில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 மாத குழந்தையும் அடக்கம்.
திருப்பதி-பக்சர்களுக்கு முகக் கவசம்:
இந் நிலையில் பன்றிக் காய்ச்சலை தடுக்க திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்படுகிறது. இதற்காக மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான முகக் கவசங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதை அணிந்தபடியே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications