10 பெண்களை ஏமாற்றிய நகைக்கடை அதிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐந்து பெண்களை திருமணம் செய்து, மேலும் ஐந்து பெண்களிடம் திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய கோவை நகைக்கடை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த சுஜித் என்ற மணிகண்டன் நகைக்கடை நடத்தி வருகிறார். தற்போது 29 வயதாகும் அவர் தனக்கு மணமகள் வேண்டும் என இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்திருந்தார்.

இதை பார்த்து பலரும் அவரை நாடியுள்ளனர். அவர்களில் சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவரும் ஒருவர். அவர் தனது மகளுக்கு சுஜித்துடன் திருமணம் பேசி முடித்தார்.

அப்போது சுஜித் அவரிடம் திருமண செலவுக்காக ரூ. 50,000கேட்டுள்ளார்.பின்னர் மேலும், ரூ. 50 ஆயிரம் வேண்டுமென கூறியுள்ளார். அதை கோயம்புத்தூரில் வந்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை பணத்தைக் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய பின் சுஜித், அந்த பெண் வீட்டினருடனான தொடர்பை துண்டித்துவிட்டார். பெண்ணின் தந்தை பல முறை அவரது மொபைலுக்கு தொடர்பு கொண்ட போதும், அவரைப் பிடிக்க முடியவில்லை.

சுஜித்தா ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் எம்கேபி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சுஜித்தை கைது செய்து விசாரித்தபோது அவருக்கு ஏற்கவே ஐந்து முறை திருமணமாகியுள்ளதை ஒப்புக் கொண்டார்.

கடைசியாக கடந்த மார்ச் 15ம் தேதி பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும், ஐந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர்களிடம் பல லட்சம் பணம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரிடம தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+