உதவியாளர்களின் ஊழல்-பதவியிழக்கும் ஆளுநர்

அஸ்ஸாம் ஆளுநராக தற்போது இருக்கும் ரஸி முன்பு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தார். அப்போது இவரது உதவியாளர்களாக இருந்த ராஜேஷ் தாக்கூர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அவினாஷ் குமார் ஆகியோர்,
இடமாற்றம், பதவி நியமனம் உள்ளிட்டவற்றில் தலையிட்டு பெருமளவில் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காரியம் சாதித்ததாக புகார் எழுந்தது.
மேலும், இருவரும் பெருமளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள 34வது தேசிய விளையாட்டுப் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் இவர்கள் பெருமளவில் மோசடி செய்து சுருட்டியுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்வடர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அவர்கள் செய்த முறைகேடுகள் உண்மைதான் என்று தெரிய வந்தது.
இதையடுத்து ரஸியை ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் டெல்லி வந்திருந்த ரஸி, பிரதமரை சந்தித்தார். அப்போது ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அவரைக் கேட்டுக் கொண்டார். மேலும், உடல் நலனைக் காரணம் காட்டி ராஜினாமா செய்யுமாறும் அவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டாராம். ஊழலுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தால் மத்திய கூட்டணி அரசுக்கு பெயர் கெட்டுப் போய் விடும் என்பதால் இந்த அறிவுரையை தெரிவித்துள்ளார் பிரதமர் என்று தெரிகிறது.
பிரதமரின் உத்தரவை ஏற்க முதலில் ரஸி மறுத்துள்ளார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தனது உத்தரவில் உறுதியாக இருந்ததால் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க கால அவகாசம் கேட்டுள்ளாராம் ரஸி.
யார் இந்த ரஸி...
ரஸி தீவிர காங்கிரஸ்காரர். 1969ம் ஆண்டு உ.பி. இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 71ல் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 73 வரை அப்பதவியில் நீடித்தார்.
1980 முதல் 85 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பின்னர் 1988 முதல் 98 வரை மீண்டும் ராஜ்யசபா உறுப்பினரானார்.
கடந்த 2005ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது ஒரு சர்ச்சையில் சிக்கினார். அப்போது சட்டசபையில் பாதிக்கும் மேற்பட்ட சீட்களை வென்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் காங்கிரஸ் ஆதரவுடன் சொற்ப எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருந்த சிபு சோரனை ஆட்சியமைக்க அழைத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அப்போதைய குடியரசுத் தலைவர் கலாமை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு ரஸிக்கு கலாம் உத்தரவிட்டார்.
இப்படி சர்ச்சையின் மறு உருவமாக திகழ்ந்த ரஸியை கடந்த ஜூலை 18ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றியது காங்கிரஸ் கூட்டணி அரசு.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications