50 அடி பள்ளத்தில் ஜீப் உருண்டது-இருவர் பலி
புளியரை: அம்பநாடு எஸ்டேட் பகுதியில் ஜீப் ஒன்று 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே அம்பநாடு எஸ்டேட் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கழுதுருட்டி பகுதிக்கு ஜீப்பில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று மாலை வேலை முடிந்த நிலையில் சுமார் 15 பேர் ஒரு தனியார் ஜூப்பில் கழுதுருட்டி நோக்கி வீ்ட்டு தேவைக்கான பொருட்கள் வாங்க வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜீப் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பள்ளத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இந்த விபத்தில் ஜெயக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயராணி என்பவர் புனலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications