இந்தோனேசியா-நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம்
ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் இன்று சக்தி வாயந்த பூகம்பம் ஏற்பட்டது. அதே போல நியூசிலாந்திலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 17 ஆயிரத்து 508 தீவுகளை உள்ளடக்கிய நாடு இந்தோனேசியா. பிசிபிக் 'ரிங் ஆப் பயர்' எனப்படும் பூகம்பம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகம் காணப்படும் பகுதியில் இருக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 16ம் தேதி மேற்கு இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ஆனால், கடலுக்கடியில் மிக ஆழத்தில் ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சுனாமியும் வரவில்லை.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6.01 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள மலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உணரப்பட்டது.
இந்த பூகம்பம் டெர்னேட் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 127 கிமீ தூரத்தில் கடலில் 10 கிமீ., ஆழத்தில் மையமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அதே போல நியூசிலாந்தில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பியோட்லாந்து பகுதியில் கட்டடங்கள் அதிர்ந்தன.
சில வாரங்களுக்கு முன் இந் நாட்டில் 7.6 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications