10 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!
டெல்லி: டிஷ் டிவியின் தாய் நிறுவனமான எஸ்ஸெல் குழுமம் உள்ளிட்ட 10 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த பத்து நிறுவனங்களும் முதல்கட்டமாக ரூ.1123 கோடியை முதலீடு செய்யவிருக்கின்றன.
இந்தியாவில் நேரடி முதலீடு செய்யும் பொருட்டு பல நிறுவனங்கள் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 10 நிறுவனங்கலுக்கு மட்டும் முதல்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசின் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு போர்டு. இவற்றுள் எஸ்ஸெல் குழுமமும் ஒன்று. இந்த நிறுவனம் மட்டுமே ரூ.750 கோடி முதலீடு செய்கிறது.
அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்:
இந்தியா ரைஸிங் ஃபண்ட், யூனிடெக் வயர்லெஸ் தமிழ்நாடு, ரிஷ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பைசெல் கம்யூனிகேஷன்ஸ், சென்னையைச் சேர்ந்த ஆஷா மைக்ரோ கிரெடிட், சோழமண்டலம் டிபிஎஸ் ஃபைனான்ஸ், கார்கில் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications