பாக். எல்லையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்-ரூ. 125 கோடி மதிப்பு
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் ரூ. 125 கோடி மதிப்பு கொண்ட 25 கிலோ ஹெராயின் என்னும் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையே உள்ள 553 கிமீ நீள எல்லை பகுதியில் முள்வேலி அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி அப்பகுதியில் சமீபகாலமாக போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த 15ம் தேதி இப்பகுதியில் 2 கிலோ ஹெராயின்களை கடத்த முயன்ற 4 பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் கடந்த 17ம் தேதி 6 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த இரு சம்பவங்களை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து சுமார் 250 கிமீ தூரத்தில் இருக்கும் குர்தாஸ்பூரில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ரூ. 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது குறித்து பஞ்சாப் மாநில எல்லைப்புற டிஐஜி ஜகிர் சிங் கூறுகையில்,
எல்லையில் சந்தகேத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதை உணர்ந்த நாங்கள் சோதனைகளை தீவிரப்படுத்தினோம். அப்போது ஒரு நபர் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்துவிட்டார்.
அந்த பையில் 25 கிலோ ஹெராயின் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 125 கோடி என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications