பன்றி காய்ச்சல்-மகாராஷ்டிரா ரயில்களை சோதனையிடும் மேற்கு வங்கம்
கொல்கத்தா: தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என சோதனையிடும் முடிவுக்கு மேற்கு வங்க மாநிலமும் வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று மட்டும் 9 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்கு மேற்கு வங்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே அதிகாரிகள், கொல்கத்தா துறைமுக நிர்வாகிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் பின்னர் மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் அசோக் மோகன் சக்ரபர்த்தி கூறுகையில்,
மகாராஷ்டிராவில் இருந்து வரும் ரயில்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லைப்புற ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். பின்னர் பயணிகள் அனைவரும் சோதனையிட படுவார்கள். அவர்களில் காய்ச்சல், சளி போன்ற ஸ்வைன் அறிகுறி இருப்பவர்களுக்கு சிவப்பு அட்டையும், மற்றவர்களுக்கு பச்சை அட்டை கொடுக்கப்படும்.
அதன்பின்னர் ரயில் அங்கிருந்து புறப்படும். பின்னர் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கும் சிவப்பு அட்டை பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தற்போது மும்பையில் இருந்து ஹவுராவுக்கு ஆறு ரயிலும், புனேவுக்கு ஒரு ரயிலும் செல்கிறது. இவற்றில் மூன்று தினசரி ரயில்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications