குற்றாலம்: வெள்ளத்தில் சிக்கியவர் உயிருடன் மீடபு
குற்றாலம்: குற்றாலத்தி்ல நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பயணி ஒருவர் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக செயல்பட்ட போலீசார் அவரை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் நேற்று பகலில் நன்றாக வெயில் அடித்தது. ஆனால், மாலையில் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் எதிர்பாராத வகையில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆனால், குற்றால மெயின் அருவியில் தண்ணீர் அளவு அதிகரிப்பதற்கான எந்த அறிகுறியும் இரவு 8 மணி வரைதெரியவில்லை. இதையடுத்து பயணிகள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். ஆனால், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சுற்றுலா பயணி ஒருவர் அடித்து செல்லப்பட்டு தடாகத்தில் விழுந்தார். இதை உடனடியாக கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கள் வேகமாக செயல்பட்டு அந்த நபரை உயிருடன் காப்பற்றினர்.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து கொண்டே போனது. தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுவதை பார்த்த போலீசார் அங்கு குளிக்க தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications