மகாராஷ்டிரா பள்ளி பேருந்தில் தீ-15 குழந்தைகள் காயம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலை தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் ராய்காட் மாவட்த்தில் உள்ள நாவி மும்பையில் உள்ள சி.கே.டி பள்ளிக்கு, குழந்தைகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காலை சுமார் 6.50 மணிக்கு இந்த பஸ் பான்வெல் நகரில் இருந்து 30 கிமீ., தொலைவில் சென்று கொண்டிருந்த போது தீடிரென்று தீ பற்றி கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த குழந்தைகள் பயத்தில் அலறின. இந்த சம்பவத்தில் 15 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வந்த பஸ்சில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் எஸ்.டி.காட்ஜே கூறுகையில், காயமடைந்த குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பேருந்து குழந்தைகளின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications