வறட்சி: 1 கோடி டன் அரிசி உற்பத்தி குறையும் -பவார்
டெல்லி: ஏறக்குறைய நாட்டின் பாதி பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அரிசி உற்பத்தி இந்த காரிப் பருவத்தில், 1 கோடி டன் வரை குறையும். எனவே அரிசிக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ. 850லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டில் சரத்பவார் பேசுகையில்,
10 மாநிலங்களில் உள்ள 246 மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. இது மொத்த விவசாய நிலத்தில் 46 முதல் 47 சதவீதம். இதன் காரணமாக நெல் பயிரிடுவது கடந்த ஆண்டை விட சுமார் 1.4 கோடி ஏக்கர் அளவுக்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரிசி விளைச்சல் சுமார் 1 கோடி டன் வரை பாதிக்கப்படலாம்.
இதை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பயிர் செய்யத் தூண்டும் நோக்கத்திலும் நெல் பயிருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த குறைந்தபட்ச கொள்முதல் விலையான ரூ. 850யை ரூ. 1000 ஆக உயர்த்தியுள்ளோம். இதன்மூலம் விவசாயிகளின் பயிர்களுக்கு உத்தரவாதம் தந்துள்ளோம்.
விலைவாசி கடுமையாக உயரும் பட்சத்தில் மத்திய அரசு தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரிசி மற்றும கோதுமைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை கிடைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதை தவிர்த்து எண்ணெய் விதைகள் மற்றும் கரும்பு விளைச்சலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை வெகுவாக உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது. இதை தடுக்க கிலோ ரூ. 10 என்ற மானிய விலையிலும், ரேஷன் கடைகளில் பருப்புகள் வழங்குவதை செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மில் அதிபர்கள் கொள்முதல் செய்யும் அரிசியில் பாதியை, ரேஷன் கடைகளுக்காக வரியாக வாங்க, மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால், கடந்த ஆண்டு கேரளா, தமிழகம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், இதை பின்பற்றவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications