எம்பிபிஎஸ் காலியிடங்கள்-25ம் தேதி 2வது கட்ட கவுன்சிலிங்
சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 25ம் தேதி 2வது கட்ட கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. ஒரு வாரத்திற்கு இது நடைபெறும்.
ஏற்கெனவே மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் சேர்ந்து வேறு கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், முதல் கட்ட கவுன்சலிங்கில் இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர், உச்ச நீதிமன்ற 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், ரேங்க் பட்டியலில் (ரேங்க் 441 ஏ முதல் ரேங்க் 742 வரை.) இடம்பெற்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் இடம் ஒதுக்கப்படும்.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 9 காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் 2-ம் கட்ட கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
முதல் கட்ட கவுன்சலிங் மூலம் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மறு ஒதுக்கீடு மூலம் விரும்பிய கல்லூரிக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு தகவல் ஏதும் அனுப்பப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கூறியுள்ளது.
மறு ஒதுக்கீடு விரும்பும் மாணவர்கள், தாங்கள் இப்போது படித்துவரும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்; அத்துடன் "செயலர், தேர்வுக் குழு, சென்னை - 10' என்ற பெயருக்கு ரூ.500-க்கு வரைவுக் காசோலையும் கொண்டு வர வேண்டும்.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை நடந்த முதல் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
முதல் கட்ட கவுன்சலிங்கின்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,398 மாணவர்களில், 14 பேர் பி.இ. உள்பட வேறு படிப்புகளில் சேர்ந்ததால் காலியிடம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்து விட்டதால், 2-ம் கட்ட கவுன்சலிங்கில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி இடம்பெறவில்லை.
முதல் கட்ட கவுன்சலிங்கின்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடம் இருந்தும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பல மாணவர்கள் சேர்ந்தனர்; அப்படிப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பினாலும், அதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் முதல் வாரத்துக்குப் பிறகு 3-ம் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும்.
இதேபோல மதுராந்தகத்தில் தொடங்கப்படும் புதிய சுயநிதி "கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி' மூலம் கிடைக்கும் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், திருச்சியில் தொடங்கப்படும் "சென்னை மருத்துவக் கல்லூரி' மூலம் கிடைக்கும் 97 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கும் 3-ம் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பி.எட். முடிவைப் பார்க்க முடியாத மாணவர்கள்...
இதற்கிடையே, நேற்று வெளியிடப்பட்ட பி.எட். தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். அரசு கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த இணையதளம் செயல்படாமல் இருந்ததால் இந்த அவலம்.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 555 உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், பி.எட். பருவத் தேர்வு கடந்த மே மற்றும் ஜூனில் நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்படும் என்று கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்தது. இதையடுத்து நேற்று மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்குச் சென்றபோது சர்வர் டவுன் காரணமாக முடிவை அறிய முடியவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்கள், தேர்வு முடிவை அறிய முடியாமல் அவதிக்கு உள்ளாயினர்.
இதுபற்றி கல்வியியல் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, "இணையதள பிரச்னையால் தேர்வு முடிவை மாணவர்களால் உடனே பார்த்து அறிய முடியவில்லை. இருப்பினும் 555 கல்வியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளையும் விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துவிட்டோம். அந்தந்த கல்லூரிகள் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications