இம்ரான்-பெனாசிர் இடையே செக்ஸ் உறவு இருந்தது: நூல்

இருவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தபோது பல்கலைக்கழக வளாகத்தில் இவர்களது காதல் வெகு பிரபலம் என்றும், இருவருக்கும் இடையே நெருங்கிய உறவும், செக்ஸ் உறவும் கூட இருந்ததாக அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் சேன்ட்போர்ட் என்ற அந்த புத்தகாசிரியர் இம்ரான் கான் குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பெனாசிர் பூட்டோவும், இம்ரான் கானும், ஆக்ஸ்போர்டில் இணைந்து படித்தபோது இம்ரான் மீது காதல் வயப்பட்டார் பெனாசிர். இம்ரானை அவர் தீவிரமாக காதலித்தார். இம்ரானும், பெனாசிரைக் காதலித்தார்.
இருவரும் மிக மிக நெருக்கமாக பழகினர். இருவருக்கும் இடையே நல்ல உறவும், ஏன் செக்ஸ் உறவும் கூட இருந்தது. இவர்களின் காதலை அறிந்த இம்ரான் கானின் தாயார், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூட முயன்றார். ஆனால் அது கை கூடவில்லை.
பூட்டோவுக்கு 21 வயதாக இருக்கும்போது அவர் லேடி மார்கரெட் ஹாலில் 2வது ஆண்டு படித்து வந்தார். 1975ம் ஆண்டு இம்ரானை அவர் சந்தித்தார். இம்ரான் கானைப் பார்த்ததுமே அவருக்கு காதல் வந்து விட்டது. இம்ரானை அவர் லாகூர் சிங்கம் என்றுதான் அழைப்பார்.
இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். குறுகிய காலமே இவர்களுக்குள் பழக்கம் இருந்தது. இருந்தாலும் பல்கலைக்கழக வட்டாரத்தில் இவர்களின் காதல் வெகு பிரசித்தமாக இருந்தது.
மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே செக்ஸ் உறவும் இருந்தது என்று நம்பலாம். காரணம், இருவரும் அவ்வளவு நெருக்கமாக, அன்னியோன்யமாக பழகி வந்தனர். இம்ரான் கான் யாரிடம் எல்லாம் நெருக்கமாகப் பழகுகிறாரோ அவர்களுடன் எல்லாம் உறவு வைத்துக் கொள்வார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்லியதை வைத்து இப்படிக் கூற வேண்டியுள்ளது என்று போகிறது அந்த நூல்.
ஆனால் பெனாசிருடன் தான் ஒரு போதும் செக்ஸ் உறவை வைத்துக் கொண்டதில்லை என்று இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த நூலில் உள்ள பல விஷயங்கள் அபத்தமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications