குமரி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்-4 பேர் காயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதி கொண்டதில் நான்கு பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த ஜெரோம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் ராஜாக்கமங்கலத்தில் இருந்து 13 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டம் காரணமாக விசைப்படகு கடல் அலையில் முட்டம் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது.
அப்போது முட்டம் கடல் பகுதியில் இருக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கட்டுமரங்களின் அருகில் விசைப்படகு சென்றதால் ஆத்திரமடைந்த முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மீனவர்கள் மீது வலையில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல நடத்தினர்.
இதில் விசைப்படகில் இருந்த புதுகிராமத்தை சேர்ந்த ஜான்சன், ராமேஸ்வரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்த தாமஸ், டிசோ ஆகிய நான்கு மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மீனவர்கள் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications