300 மூத்த அலுவலர்களை நீக்கும் அக்சென்சர்!
பிரபல சர்வதேச அவுட்ஸோர்ஸிங் மற்றும் நிர்வாக ஆலோசனை நிறுவனம் அக்சென்சர் தனது மூத்த நிர்வாக அலுவலர்களை 7 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
வருகிற நான்காம் காலாண்டில் இந்நிறுவனத்தின் மறுசீரமைப்புச் செலவு 247 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை சமாளிக்க இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது அக்சென்சர்.
மேலும் உலகம் முழுக்க உள்ள தங்கள் அலுவலகங்களின் தேவையற்ற பகுதிகளை பயன்பாட்டிலிருந்து விலக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 119 மில்லியன் டாலர் மிச்சப்படுத்தப்படுத்தப்படும்.
மூத்த நிர்வாக அலுவலர்களை நீக்குவதன் மூலம் மீதித் தொகையை சரிகட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, உலகம் முழுக்க உள்ள இந்நிறுவனக் கிளைகளிலிருந்து 300 மூத்த ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள்.
வரும் 2010-க்குள் பணியாளர் நீக்கத்தை படிப்படியாக அமலாக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அக்சென்சர் சிஇஓ வில்லியம் கிரீன் தெரிவித்துள்ளார்.
அக்சென்சரில் இன்றைய தேதிக்கு 1,77,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 4800 பேர் மூத்த நிர்வாக அலுவலர்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications