திருப்பதி-சுவாமி நகையை திருடி அடகு வைத்த அர்ச்சகர்
திருப்பதி: திருப்பதி கோவிலில் சுவாமியின் நகையைத் திருடி அடகு வைத்த தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த ரெட்டி என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார். அதில், கடந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தான அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த 300 தங்க டாலர்கள் மாயமாகிவிட்டதாகவும், கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்க நகைகளில் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதாகவும்,
இதனால் காணிக்கையாக வந்த நகைகளின் மதிப்பை திருப்பதி தேவஸ்தானம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளின் முழு விவரத்தையும் திருப்பதி தேவஸ்தானம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டன
இதையடுத்து திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில்களில் உள்ள நகைகள் கணக்கிடும் பணியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோதண்ட ராமசாமி கோவிலுக்கு சொந்தமான நகைகளை தேவஸ்தான அதிகாரிகள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு தலைமை அர்ச்சகராக உள்ள வெங்கட்ரமண தீட்சதர், அதிகாரிகளிடம் சென்று நான் 2 தங்கச் சங்கிலிகளை திருடி அடகுகடையில் வைத்துவிட்டேன் என்று கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து திருமலை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
நான் 15 ஆண்டுகளுக்கும் மேல் திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். எனக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாத சம்பளமாக ரூ.3,000 மட்டும்தான் கிடைத்தது. இப்போதுதான் ரூ.10,000 தருகிறார்கள்.
எனக்கு 3 மகள்கள். 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தில் என்னிடம் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது.
இந்நிலையில் எனக்கும், மனைவிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ செலவுக்காக கோதண்ட ராமசாமி சிலையின் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலிகளை திருடி அடகுகடையில் அடகு வைத்தேன்.
அந்த நகைகளை விரைவில் மீட்டு சாமியின் கழுத்தில் போட்டுவிட நினைத்திருந்தேன். அதிகாரிகள் திடீரென கணக்கெடுக்க வந்ததால் நானாகவே உண்மையை சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
நகை திருடிய அவரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications