ஸ்வைன்-சென்னையில் 3வது பலி: நாடு முழுவதும் 50 பேர்
சென்னை: சென்னையி்ல் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.
குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் இந்த நோய்க்குப் பலியானார். மூல நோய்க்கு சிகிச்சை பெற்று இவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு பலியானார்.
ஏற்கனவே சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன், நீலாங்கரையைச் சேர்ந்த மீனவர் ஆகியோர் பலியான நிலையில் இப்போது மூன்றாவதாக ஒருவர் பலியாகியுள்ளார்.
இறந்த சேகர் மணமாகாதவர் ஆவார். தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.
சேகரின் உடலை வீட்டு்க்கு எடுத்துச் செல்லாமல் நேராக சுடுகாட்டுக்கு சென்று எரித்துவிட வேண்டும் என அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டனர்.
அங்கு அவரது உறவினர்கள் முகக் கவசங்கள் அணிந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இறுதி சடங்கு முடிந்ததும் சேகரின் உடல் எரியூட்டப்பட்டது.
இந் நிலையில் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் மேலும் இருவரும் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளதால் இதுவரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர நேற்றும் இன்றும் இந்த நோய் அறிகுறியுடன் புதிதாக 159 பேர் நாடு முழுவதும் மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியா முழுவதும் 2,539 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications