பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் மரணம்
டெல்லி : பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இன்று பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹஸ்முக் ஹிங்கு என்பவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். குஜராத்தில் மட்டும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியை சேர்ந்த அனில் சேஷ்ராவ் சவான் (26) என்ற வாலிபரும், ஹரியானா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானார்கள்.
டெல்லியில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
2வது கட்ட தாக்குதல் அபாயம்
பன்றிக் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 2வது கட்ட பன்றிக் காய்ச்சல் தாக்குதல் ஏற்படவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் இதை சமாளிக்க தயாராகிக் கொள்ளுமாறும் அது எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் மழைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் கடுமையாக இருக்கும் எனவும் அது கூறியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1799 பேர் உயிரிழந்துள்ளனர். 177 நாடுகளை பன்றிக் காய்ச்சல் பாதித்துள்ளது.
கர்நாடகத்தில் மேலும் 27 பேருக்கு பாதிப்பு
இதற்கிடையே, கர்நாடகாவில் மேலும் 27 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் 19 பேரும், பெல்காமில் 5 பேரும், மங்களூரில் 2 பேரும், மைசூரில் ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications