10வது ஆண்டு விழா - ஒரு மாதம் கொண்டாடும் புதிய நீதிக் கட்சி
சென்னை: அண்ணா நூற்றாண்டு விழா, புதிய நீதிக்கட்சியின் 10ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் தலைவர் ஏசி சண்முகத்தின் பிறந்த நாள் விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடப் போவதாக புதிய நீதிக் கட்சி கூறியுள்ளது.
புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று கட்சி தலைவர் ஏசி சண்முகத்தின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இக்கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்த இரு மாநில முதவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் விலைவாசியை குறைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், மத்திய அரசு இதனை தடுத்து நிறுத்தக் கோரியும் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாய் வாழ இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழா, புதிய நீதிக்கட்சியின் 10ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் தலைவர் ஏசி சண்முகத்தின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவை ஒரு மாத காலம் கொண்டாட இருக்கிறோம்.
நாட்டு நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை இந்த கூட்டம் கேட்டு கொள்கிறது.
அனைத்து முதலியார்கள், வேளாளர்கள், பிள்ளைமார்கள், செங்குந்தர்கள் மற்றும் சேனை தலைவர் ஆகிய பிரிவினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications