விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது-ராஜா
தருமபுரி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விலைவாசி உயர்வு தேசிய அளவில் பொது பிரச்சனையாக மாறியுள்ளது. மத்திய அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்தியாவில் 177 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு தான் வறட்சிக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது.
பணவீக்கம் குறைந்த பிறகும் விலைவாசி குறையவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது வினியோகத்துறையை வலுப்படுத்த வேண்டும். உலக பொருளாதார நெருக்கடியால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தாராளமய பொருளாதார கொள்கையே முக்கிய காரணமாகும்.
பாஜகவுக்கு நெருக்கடி...
பாஜக ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொள்கை ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பாஜக கரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறைக்கு ஆதரவான தீர்ப்பு என அத்வானி வரவேற்றார்.
ஐக்கிய முற்போக்கு அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைக்கு பாஜக ஒத்துழைப்பு தரும் என்று அக்கட்சி தெரிவித்தது. இதனால், காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே பொருளாதார கொள்கையில் வேறுபாடு எதுவும் இல்லை என தெரிகின்றது.
இந்தியாவில், உழைக்கும் மக்களுக்காகப் போராட இடது சாரிகளைத் தவிர வேறு யாரும் இல்லை என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications